குமாரபாளையம் அருகே சினிமா நடிகர் மாரடைப்பால் மரணம்
குமாரபாளையம் அருகே, சினிமா நடிகர் தனசேகரன் என்பவர், மாரடைப்பால் காலமானார்.;
நடிகர் தனசேகர்.
குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம், அல்லிநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் தனசேகரன், 43. இவர் வெங்காயம், ஐம்புலன் உள்ளிட்ட சினிமா படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். நடன குழுக்களில் நடனம் ஆடியும் வந்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு திருச்செங்கோடு அருகே கோழிக்கால்நத்தம் என்ற பகுதியில் உள்ளூர் திருவிழாவில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடியுள்ளார். நேற்று முன்தினம் காலை, ஊருக்கு வந்து சாப்பிட்டு படுத்தவர் எழுந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. நேரில் வந்த டாக்டர் பரிசோதித்து பார்த்ததில் இவர் இறந்து விட்டார் என கூறியுள்ளார். இதனால் இவரது பெற்றோர், ஊர் பொதுமக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.