குமாரபாளையம்: தேவாலயம், தனியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடட்ம்

குமாரபாளையம் தேவாலயம் மற்றும் தனியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Update: 2021-12-25 15:15 GMT

ராகவேந்திரா மழலையர் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தா மாஸ்க் அணிந்தவாறு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

குமாரபாளையம் தேவாலயம் மற்றும் தனியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் நடராஜா நகர் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவில் வளாகம் முழுதும் வண்ண விளக்குகளாலும், வண்ண வண்ண தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கிறிஸ்து பிறப்பை அறிவித்த நட்சத்திர வடிவ அலங்கார பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டு இருந்தன.

குமாரபாளையம் நடராஜா நகர் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்ட அலங்கார குடில்.

இயேசு பிறப்பை குறிப்பிடும் வகையில் அலங்கார குடில் அமைக்கபட்டு இருந்தன. இது காண்போரை மிகவும் கவரும் விதமாக இருந்தது. நடராஜா நகரில் குடியிருக்கும் பிற மதத்தினரும் இந்த குடிலை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைவரும் புத்தாடை அணிந்து வந்தனர். ஒருவருக்கொருவர் இனிப்புகள், பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த நபர்கள் ஆடிப்பாடி குழந்தைகளை மகிழ்வித்ததுடன் பரிசுகள் வழங்கினர். இதே போல் ராகவேந்திரா மழலையர் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தா மாஸ்க் அணிந்தவாறு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News