குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் நேரு பிறந்தநாள் விழா
குமாரபாளையத்தில், விடியல் ஆரம்பம் அமைப்பின் சார்பில் நேரு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் அமைப்பின் சார்பில், நேரு பிறந்தநாள் விழா சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் விழா, விடியல் ஆரம்பம் அமைப்பின் சார்பில், அமைப்பாளர் பிரகாஷ், தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில், குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள, சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில், நேருவின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி, அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு பங்கேற்று புத்தகங்கள் பரிசாக வழங்கினார். மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் முகக்கவசம், கிருமிநாசினி வழங்கப்பட்டது. ஆசிரியை சுமதி, இசை அமைப்பாளர் மணி கிருஷ்ணா, பாடலாசிரியர் சரவணபிரியன், உதவிக்கரம் அங்கப்பன், மாஸ்டர் சதீஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.