சவுண்டம்மன் கோவிலில் அம்மன் வேடமணிந்த குழந்தைகள்

Ayudha Puja -குமாரபாளையம் சவுண்டம்மன் கோவிலில் அம்மன் வேடமணிந்த குழந்தைகள் ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-10-06 03:13 GMT

குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் அம்மன் வேடமணிந்த குழந்தைகள் கலை நிகழ்சிகள் நடைபெற்றது.

Ayudha Puja - குமாரபாளையம் சவுண்டம்மன் கோவிலில் அம்மன் வேடமணிந்த குழந்தைகள் ஊர்வலம் நடைபெற்றது.

நவராத்திரி விழாவையொட்டி குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் அம்மனுக்கு தினமும் ஒவ்வொரு அலங்கார வழிபாடு நடைபெற்றது. விஜயதசமி நாளையொட்டி அம்மன் சிம்ம வாகனத்தில் அருள்பாலித்தார். மேலும் குழந்தைகளுக்கு அம்மன் வேடமிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, குழந்தைகளுடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக வந்த திருவீதி உலா கோவிலில் நிறைவு பெற்றது. கோவிலில் பக்தர்கள் பக்தி பாடல்கள் பாட குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பத்திரகிரியார் தியான மையத்தில் விஜயதசமி வழிபாடு...

குமாரபாளையம் காந்தி நகர் பத்திரகிரியார் தியான மையத்தில் நவராத்திரியையொட்டி தினமும் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி, அலங்கார, ஆராதனை, செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆதரவற்ற மையங்களுக்கு அரிசி மூட்டை, மாணவ, மாணவிகளுக்கு நோட்டுகள், பேனா வழங்கப்பட்டதுடன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாக வழிபாடு..

நவராத்திரி விழாவையொட்டி அனைத்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. குமாரபாளையம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உலக அமைதி, நகரின் தொழில் வளம், மாணவ, மாணவியர் கல்வி மேம்பாடு சிறக்க வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக , அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

விஜயதசமி பூஜையில் மஞ்சள் பையில் பிரசாதம் வழங்கிய வழக்கறிஞர் சங்கத் தலைவர்..

பிளாஸ்டிக்கை ஒழிப்போம், துணிப்பை பயன்படுத்துவோம் என தமிழக அரசு, மத்திய அரசு பொதுமக்களை வலியுறுத்தி வருகிறது. பலரும் இன்னும் மார்க்கெட், ஓட்டல், மளிகை உள்ளிட்ட கடைகளுக்கு சென்றால் கேரி பேக்கில் தான் பொருட்கள் வாங்கி வருகிறார்கள். குமாரபாளையம் நகராட்சி சார்பாகவும் பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி, துணிப்பைகளை பயன்படுத்த பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக குமாரபாளையம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி, பிரச்சாரங்கள் செய்து வருகிறார்கள். இதே கருத்தை வலியுறுத்தி விடியல் ஆரம்பம், தளிர்விடும் பாரதம், அப்துல்கலாம் பசுமை படை, தளபதி லயன்ஸ் சங்கம் உள்ளிட்ட பொதுநல அமைப்பினரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் பல ஜவுளி கடைகளில் துணி பைகள் கொடுத்து வருகிறார்கள். திருமணங்களில் கூட தாம்பூலம் துணி பைகளில் கொடுத்து வருகிறார்கள். மேலும் அதிகாரிகள் பலர் அடிக்கடி கடைகளில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, கடைகளில் உள்ள கேரி பேக்குகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

பொதுவாக ஆயுதபூஜை போட்டால் பொரி, கடலையை கேரி பேக்குகளில் கொடுப்பது பலரது வழக்கம். ஆனால் குமாரபாளையத்தில் விஜயதசமி பூஜையை தனது அலுவலகத்தில் போட்ட குமாரபாளையம் வழக்கறிஞர் சங்கர் தலைவர் சரவணராஜன், பூஜைக்கு வந்த நபர்களுக்கு மஞ்சள் பையில் பொரி, கடலை உள்ளிட்ட பிரசாத பொருட்களை போட்டு கொடுத்தார். இதனை அனைவரும் பாராட்டினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News