குமாரபாளையத்தில் நடந்த குழந்தை திருமணத்தை ரத்து செய்ய நடவடிக்கை

குமாரபாளையத்தில் நடந்த குழந்தை திருமணத்தை ரத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Update: 2022-08-02 06:50 GMT

குமாரபாளையம் காவல் நிலையம் பைல் படம்.

குமாரபாளையம் அம்மன் நகரை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 28.) லாரி ஓட்டுனர். இவரது சொந்த ஊர் எடப்பாடி அருகே மூன்று ரோடு. தற்போது குமாரபாளையம் அம்மன் நகரில் வசிக்கும் அக்காள் வீட்டில் கடந்த 15 ஆண்டுகளாக தங்கி வாழ்ந்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயதிற்கும் குறைவான பெண்ணை சட்ட விரோதமாக 6 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இது பற்றி தகவலறிந்த சைல்டு லைன் அமைப்பின் அலுவலர் மனோஜ்குமார், வி.ஏ.ஒ. முருகன், மகளிர் ஊர்நல அலுவலர் சாந்தி, ஆகியோர் நேரில் சென்று இது போன்று திருமணம் செய்தது தவறு என்று அறிவுறுத்தியதுடன், ஆலோசனை வழங்க நாமக்கல் குழந்தைகள் நல மையத்திற்கு அழைத்து சென்றனர். 

Tags:    

Similar News