நேரடி வகுப்பா? ஆன்லைன் கிளாஸா? எது பெஸ்ட்? குமாரபாளையத்தில் பட்டிமன்றம்

குமாரபாளையம் அரசு பள்ளியில், வோர்டு அமைப்பு மற்றும் சைல்டு லைன் சார்பில், சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

Update: 2021-11-20 04:45 GMT

குமாரபாளையம் அருகே, வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் வோர்டு அமைப்பு மற்றும் சைல்டு லைன் சார்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பேசிய மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

குழந்தைகள் தினவிழாவையொட்டி, நவ. 14 முதல் நவ. 19 வரை குழந்தைகள் நண்பர்கள் வாரமாக கொண்டாடப்பட்டு வந்தது. இதை முன்னிட்டு,  குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில்,  வோர்டு அமைப்பு மற்றும் சைல்டு லைன் சார்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

மாணவர்களின் கற்பிக்கும் முறை இணைய  வழி கற்பிக்கும் முறை சிறந்ததா? நேரடி கற்பிக்கும் முறை சிறந்ததா? எனும் தலைப்பில், தலைமை ஆசிரியை கவுரி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டதாரி ஆங்கில ஆசிரியர் அருள் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை நடத்தினார். இதில் நேரடி கற்பிக்கும் முறையே சிறந்தது என தீர்ப்பு வழங்கினார். பட்டிமன்றத்தில் பங்கேற்று பேசிய மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சைல்டு அணி உறுப்பினர்கள் சுப்பிரமணியன், அருள்ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News