குமாரபாளையத்தில் பெட்ஷீட் போர்த்தப்பட்ட குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு
குமாரபாளையத்தில் ஒரு வயது குழந்தை மேல் பெட்ஷீட் போர்த்தியதால் மூச்சுத்திணறி குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தெற்கு காலனியில் வசிப்பவர் கார்த்திகா, 23. கூலி வேலை. நேற்று காலை 07:30 மணியளவில் இவரின் மூன்று மற்றும் ஒரு வயது பெண் குழந்தைகள் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தனர். சமையலறைக்கு சென்று பால் காய்ச்சிக்கொண்டு வந்த போது, பெட்சீட் எடுத்துக்கொண்டு மூன்று வயது குழந்தை விளையாடியது. ஒரு பெட்சீட் ஒரு வயது குழந்தை மீது மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஒரு வயது பெண் குழந்தை பிரதிக்சா மீது இருந்த பெட்சீட் எடுத்துப் பார்த்த போது மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். குழந்தையை எடுத்துக்கொண்டு உறவினர்களுடன் பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று டாக்டரிடம் காண்பித்தனர்.
குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், பெட்ஷீட் போர்த்தியதால் மூச்சு திணறி குழந்தை இறந்ததாக தெரியவந்துள்ளது.