இடை நின்ற மாணவரை மீண்டும் பள்ளியில் சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்!

குமாரபாளையம் அருகே இடை நின்ற மாணவரை முதன்மை கல்வி அலுவலர் மீண்டும் பள்ளியில் சேர்த்தார்.

Update: 2024-12-03 13:45 GMT

இடை நின்ற மாணவரை மீண்டும் பள்ளியில் சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்

குமாரபாளையம் அருகே இடை நின்ற மாணவரை முதன்மை கல்வி அலுவலர் மீண்டும் பள்ளியில் சேர்த்தார்.

பள்ளிபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவர் கதிர்வேலன். நீண்ட நாட்களாக பள்ளிக்கு வருகை புரியாமல் இருந்தார். பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறியும் ஆய்வின் போது நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாணவரை கண்டறிந்து ஆலோசனைகளை வழங்கி மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்தார். மாணவருக்கு சீருடைகளை வழங்கி தொடர்ச்சியாக பள்ளிக்கு வருகை புரிய ஆலோசனைகளை வழங்கினார்.இந்நிகழ்வின் போது பள்ளிபாளையம் வட்டாரக்கல்வி அலுவலர் குணசேகரன், பள்ளித் துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, பல்லாக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணி, பள்ளிபாளையம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News