குமாரபாளையம் பஸ் நிலையத்தில் செஸ் போட்டி விழிப்புணர்வு ஓவியம்

சென்னையில் நடைபெறவுள்ள செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு ஓவியம் குமாரபாளையம் பஸ் நிலை யத்தில் வரையப்பட்டது.

Update: 2022-07-20 14:45 GMT

சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு ஓவியம் குமாரபாளையத்தில் வரையப்பட்டது.

சென்னையில் வரும் 28 ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை சர்வதேச செஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநிலம் முழுதும் செஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்திரவின்படி, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் வழிகாட்டுதல்படி, மேலும் நேற்று குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் வாகை சூடி மகளிர் குழுவினர் சார்பில் மெகா சைஸ் செஸ் போர்டு ஓவியம் வரையப்பட்டது. இதனை பொதுமக்கள் பெருமளவில் திரண்டு வந்து பார்த்து விழிப்புணர்வு பெற்றனர்.

Tags:    

Similar News