அரசு தட்டச்சு தேர்வர்களுக்கு நீர் மோர் வழங்கிய தொண்டு அமைப்பினர்

குமாரபாளையத்தில் அரசு தட்டச்சு தேர்வுக்கு வந்தவர்களுக்கு, கோவில் விழாவிற்கு வந்தவர்களுக்கு தனியார் தொண்டு அமைப்பினர் நீர் மோர் வழங்கினர்.;

Update: 2022-03-26 10:30 GMT

குமாரபாளையத்தில் கம்பத்துகாரர் இலவச மாற்றுத்திறனாளிகள் மைய அமைப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்து, தட்டச்சு தேர்வு மாணவ, மாணவிகள், கோவில் திருவிழா பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினார்.  

குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு தட்டச்சு தேர்வுகள் நேற்று துவங்கியது. இதில் பங்கேற்க ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 40 தட்டச்சு பயிற்சி மைய மாணவ, மாணவியர்கள் 2 ஆயிரத்து 152 பேர் பங்கேற்றனர்.

இவர்களுக்கும், காளியம்மன் கோவில் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்க வந்த பக்தர்களுக்கும், ஆனங்கூர் ரோடு வீரப்பம்பாளையம் ராஜகணபதி, சர்வசக்தி மாரியம்மன் கோவில் தீர்த்தக்குட ஊர்வலத்தில் பங்கேற்க வந்த பக்தர்களுக்கும் நீர் மோர் வழங்கும் விழா நடைபெற்றது.

கம்பத்துகாரர் இலவச மாற்றுத்திறனாளிகள் மைய அமைப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்து அனைவருக்கும் நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News