பஸ் ஸ்டாண்ட் கழிவறையில் புதியதாக மாற்றப்பட்ட கதவுகள்
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கழிவறையில் கதவுகள் புதியதாக மாற்றப்பட்டன.;
பஸ் ஸ்டாண்ட் கழிவறையில்
புதியதாக மாற்றப்பட்ட கதவுகள்
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கழிவறையில் கதவுகள்
புதியதாக மாற்றப்பட்டன.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா கூறியதாவது:
குமாரபாளையம் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. இங்கு பயணிகள், பஸ் ஸ்டாண்ட் கடையினர், டெம்போ, சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் என பெரும்பாலோர் பயன்படுத்தி வருகின்றனர். இங்குள்ள கதவுகளில் தாழ்ப்பாள் இல்லாமலும், பாதி உடைத்து, பேப்பர் போட்டு ஒட்டி வைத்த நிலையிலும் இருந்தது. இங்கு பொதுமக்கள் சங்கடத்துடன் சென்று வந்தனர். இதனை சீர்படுத்த பொதுமக்கள் பலமுறை சொல்லியும் பலனில்லை. சேதமான கதவுகள் உள்ள இந்த இடத்தில் பெண்கள் செல்ல முடியாத நிலை நீடித்தது. இதனால் பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். உடனே இங்குள்ள கதவுகளை மாற்றியமைக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் நகராட்சி அதிகாரிகள் வசம் கோரிக்கை விடுக்கப்பட்டது. உடனே கழிப்பறை கதவுகள் புதியதாக மாற்றியமைக்கப்பட்டது. மக்கள் நீதி மன்றத்தின் சார்பில் நன்றிகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
படவிளக்கம் :
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கழிவறையில் கதவுகள்
புதியதாக மாற்றப்பட்டன.