குமாரபாளையத்தில் பாலம் கட்டுமான பணியை சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு

குமாரபாளையத்தில் அம்மா உணவகம், பாலம் கட்டுமான பணி ஆய்வு செய்ததுடன் இலவச மருத்துவ முகாமினை சேர்மன் துவக்கி வைத்தார்.;

Update: 2023-03-12 17:12 GMT

குமாரபாளையம் அப்பன் பங்களா பகுதியில் பாலம் கட்டுமான பணியை நகராட்சி  சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார். 

குமாரபாளையத்தில் அம்மா உணவகம், பாலம் கட்டுமான பணி ஆய்வு செய்ததுடன் இலவச மருத்துவ முகாமினை சேர்மன் விஜய் கண்ணன் துவக்கி வைத்தார்.

குமாரபாளையம் அம்மா உணவகத்தில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் திடீர் ஆய்வு செய்து, தயார் செய்து வைக்கப்பட்ட உணவினை சுவைத்து பார்த்தார். பொதுமக்கள் நிம்மதியாக சாப்பிட்டு செல்லும் வகையில் தரமான உணவு வழங்கி, அன்புடன் பரிமாற வேண்டும் என்றும், அம்மா உணவகத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக சேர்மன், அம்மா உணவாக ஊழியர்களிடம் உறுதி கூறினார்.

நாமக்கல் மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடமாடும் மருத்துவ குழுவினர், பொதுமக்கள் இருக்கும் இடம் தேடி சென்று சிகிச்சை செய்து வருகிறார்கள். இதற்கான முகாமினை சேர்மன் விஜய்கண்ணன் துவக்கி வைத்தார். காய்ச்சல், சளி, இருமல், நீரிழிவு நோய்கள் உள்பட பல நோய்களுக்கு இம்முகாமில் மருந்துகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் அப்பன் பங்களா பகுதியில் கோம்பு பள்ளம் ஓடையின் குறுக்கே மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாலம் கட்டுமான பணியை சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு செய்தார். பாலம் கட்டுமான பணியை விரைந்து முடித்து வாகன போக்குவரத்திற்கு வழிவிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதில் ஆணையாளர் ராஜேந்திரன் (பொ), நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ஆனந்தன், இனியாராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்

Tags:    

Similar News