குமாரபாளையத்தில் விபத்துக்கள் குறைய வேகத்தடை அமைக்க சேர்மன் ஆய்வு

குமாரபாளையத்தில் விபத்துக்கள் குறைய வேகத்தடை அமைக்க சேர்மன் ஆய்வு செய்தார்.

Update: 2022-09-03 13:30 GMT

குமாரபாளையத்தில் விபத்துக்கள் குறைய வேகத்தடை அமைக்க சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் சேலம் சாலையில் நேற்றுமுன்தினம் கல்லூரி மாணவர் டூவீலர் மோதி முதியவர் இறந்தார். அதே நாளில் கவுரி தியேட்டர் பகுதியில் இரு டூவீலர்கள் மோதிய விபத்தில் இரு பெண்கள் ஆபத்தான நிலையில் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு பலரும் பாதிக்கபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க சேலம் சாலையில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி வேகத்தடை அமைக்க நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

விஜய்கண்ணன் கூறிறுகையில், விபத்துகளை தடுக்க சில இடங்களில் வேகத்தடை அமைக்க மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆகியோருக்கு கோரிக்கை வைத்து வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News