குமாரபாளையத்தில் பொது மக்களுக்கு தேசியக் கொடி வழங்கிய சேர்மன்
குமாரபாளையத்தில் பொதுமக்களுக்கு சேர்மன் தேசியக்கொடி வழங்கினார்.
சுதந்திரதின விழா அமுத பெருவிழாவாக மத்திய, மாநில அரசுகளால் இந்த ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. குமாரபாளையம் நகரில் 33 வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஆக. 13 முதல் 17 வரை 5 நாட்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து சுதந்திரதின விழா கொண்டாடும் வகையில் முதல் கட்டமாக 21,19,20,23,24 ஆகிய வார்டுகளில் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் வீடுகள் தோறும் தேசியக்கொடிகள் வழங்கப்பட்டன.
நகராட்சி கமிஷனர் விஜயகுமார், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் பரிமளம், வள்ளியம்மாள், பண்டிசெல்வி, சித்ரா, கதிரவன், ஜேம்ஸ், அழகேசன், தர்மராஜன், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.