தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய சேர்மன்

குமாரபாளையம் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை நகராட்சி சேர்மன் வழங்கினார்.

Update: 2022-08-27 09:30 GMT

குமாரபாளையம் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை சேர்மன் விஜய் கண்ணன் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி, நகரங்களின் தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கம், ஆகியோருக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை சேர்மன் விஜய்கண்ணன் வழங்கினார்.

சுள்ளிமடைதோட்டம் ஆரம்ப சுகாதார மைய டாக்டர் டாக்டர் ரேணுகாதேவி, அரசு மருத்துவமனை மனோதத்துவ டாக்டர் மாணிக்கம் பங்கேற்ற மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. நகரை தூய்மையாக வைத்திருப்போம் என்ற கொள்கையின் படி அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், ஜேம்ஸ், கிருஷ்ணவேணி, சியாமளா, மகேஸ்வரி, சுமதி, பாண்டி செல்வி, கனகலட்சுமி, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ஜுல்பிகர்அலி, ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News