பள்ளிபாளையம் அருகே கண்டிபுதூரில் பெண்ணிடம் 7 சவரன் நகை பறிப்பு

பள்ளிபாளையம் அருகே பெண்ணிடம் 7 சவரன் நகையை பறித்து கொண்டு மர்ம நபர்கள் பைக்கில் தப்பினர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.;

Update: 2021-10-29 04:45 GMT

நாமக்கல் மாவட்டம்  பள்ளிபாளையம் அருகே உள்ளது கண்டிபுதூர். இங்கு இன்று காலை, வழக்கம் போல் பலரும் மார்க்கெட் பகுதியில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். 
இதில், காய்கறி வாங்கிவிட்டு தனியே சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பின் தொடர்ந்த மர்மநபர்கள், அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து, பல்சர் வாகனத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர். செயினை பறிகொடுத்த அந்த பெண், அலறி கூச்சலிட்டார்.

செயினை பறிகொடுத்தவர் பள்ளிபாளையம் சிவசங்கரின் மனைவி கீதா என்பதும், அங்குள்ள எலட்ரிகல் கடையில் வேலை பார்த்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.  வாகனத்தில் வந்த மூன்று பேரும் அங்கிருந்து தப்பினர். அந்த பெண் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்று விசாரணை நடக்கிறது. இது, கண்டிபுதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News