குமாரபாளையம் அருகே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு

குமாரபாளையம் அருகே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் 7 பவுன் செயினை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-11-20 16:15 GMT

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அருகே எதிர்மேடு பகுதியில் டீச்சர்ஸ் காலனி எதிரில் வசிப்பவர் சம்பூர்ணம், 65. இவரும், இவரது கணவர் நடேசன், 70, ஒரு அறையிலும், இவரது மகள் சுதா, மருமகன் செல்வமணி, இவர்களின் 12 வயது மகள் ஆகிய மூவரும் மற்றொரு அறையிலும் நேற்றுமுன்தினம் தூங்கி கொண்டிருந்தனர்.

இரவு சுமார் 1  மணியளவில் பின்புற கதவை திறந்து கொண்டு வந்த மர்ம நபர்கள், சுதா, செல்வமணி இருந்த அறையின் கதவின் தாழ்பாளை, கதவும் திறக்க முடியாதபடி துணியால் கட்டினர். மூதாட்டி சம்பூர்ணம் இருந்த அறைக்கு சென்ற மர்ம நபர்கள் சம்பூர்ணம் கழுத்தில் அணிந்திருத்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்தனர்.

அப்போது கண் விழித்த சம்பூர்ணம் தாலியை கையில் பிடிக்க, செயினை மட்டும் எடுத்துக்கொண்டு ஓடி விட்டனர். தாலி தப்பித்தது. அதன் பின் கணவரை எழுப்பி, மகள் அறையை திறந்து விட்டு தகவலை சொன்னார். மருமகன் செல்வமணி பல இடங்களில் தேடியும் அவர்கள் கண்ணில் தென்படவில்லை.

உடனடியாக தேவூர் போலீசில் சம்பூர்ணம் புகாரளித்தார்.  இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News