மத்திய அரிமா சங்கத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள் கூட்டங்களில் பங்கேற்று ரகளை..!

குமாரபாளையம் மத்திய அரிமா சங்கத்திலிருந்து நீக்கப்பட்டவார்கள் மீண்டும் கூட்டங்களில் பங்கேற்று ரகளையில் ஈடுபட்டதால் போலீசில் புகார் செய்யப்பட்டது.

Update: 2023-09-14 15:30 GMT

மாதிரி படம்

குமாரபாளையம் மத்திய அரிமா சங்கத்திலிருந்து நீக்கப்பட்டவார்கள் மீண்டும் கூட்டங்களில் பங்கேற்று ரகளையில் ஈடுபட்டதால் போலீசில் புகார் செய்யப்பட்டது.

குமாரபாளையம் மத்திய அரிமா சங்க தலைவராக ராஜண்ணன், செயலராக ராஜேந்திரன், பொருளராக மனோகரன் செயல்பட்டு வருகிறார்கள். இதில் சுமார் 75 உறுப்பினர்கள் உள்ளனர். சங்க உறுப்பினர்களான மயில்சாமி, லிவிகுமார் ஆகிய இருவரும் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக சங்க பொதுக்குழுவில் முடிவெடுத்து கடந்த ஆண்டு நீக்கிவிட்டனர். ஆயினும் தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் வந்து அத்துமீறி செயல்பட்டு வந்துள்ளனர்.

இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, மாவட்ட ஆளுநர் வசம், இவர்களை நீக்கியது சரியே என்று கடிதம் வாங்கி வர சொன்னதின் பேரில், அந்த கடிதமும் வாங்கி போலீசில் கொடுக்கப்பட்டது. அதையும் மீறி, செப். 8, இரவு 08:15 மணியளவில் சங்க கூட்டம், கோட்டைமேடு, சங்க கட்டிடத்தில் நடந்த போது, மீண்டும் அவர்கள் இருவரும் வந்து, தகாத வார்த்தை பேசி தகராறு  செய்துள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசில் சங்க சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். போலீசார் விசாரணையில் இருவரும் தலைமறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News