குமாரபாளையத்தில் முளைப்பாரி ஆற்றில் விடும் வைபவம்
குமாரபாளையத்தில் முளைப்பாரி ஆற்றில் விடும் வைபவம் நடைபெற்றது.;
குமாரபாளையத்தில் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் இருந்து முளைப்பாரி ஆற்றில் விடும் வைபவம் நடைபெற்றது.
குமாரபாளையம் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில் அனுமன் ஜெயந்தி விழாவையடுத்து நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவில் கூடாரவல்லி உற்சவம், கொடியேற்றம், பஜனை திருவீதி உலா, பரமபத வாசல் திறப்பு, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஆகிய வைபவங்கள் நடைபெற்றன. இதன் ஒரு கட்டமாக முளைப்பாரி ஆற்றில் விடும்
வைபவம் நடைபெற்றது. பாண்டுரங்கர் கோவிலில் இருந்து பெண்கள் தாங்கள் போட்டு வைத்த முளைப்பாரிகளை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக மேள தாளங்கள் முழங்க காவேரி ஆற்றுக்கு சென்றனர்.
அங்கு காவிரி கரையில் அனைத்து முளைப்பாரிகளும் வைக்கப்பட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டன. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.