முதல் நகர் மன்ற தலைவர் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு!
குமாரபாளையத்தில் முதல் நகர் மன்ற தலைவர் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது.;
முதல் நகர் மன்ற தலைவர் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு.
குமாரபாளையத்தில் முதல் நகர் மன்ற தலைவர் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு.நிகழ்ச்சி நடந்தது.
குமாரபாளையம் நகராட்சி, பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக அறிவிக்கப்பட்டதும் நடைபெற்ற முதல் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதல் நகர் மன்ற தலைவராக பதவி ஏற்றவர் ரகுராமன். இவர் குமாரபாளையத்தில் அப்போதைய 20 வார்டுகளுக்கும் குடிநீர் மேல்நிலை தொட்டிகள் கட்டியதுடன் நிரந்தரமான காவிரி ஆற்று குடிநீர் சுத்திகரித்து பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நீருந்து நிலையம் அமைத்து இன்று வரை அதை பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் குமாரபாளையம் நகரின் வளர்ச்சிக்கு பாடுபட்டு தினசரி சந்தை, பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தவர். அவரது 25 ஆம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் குமாரபாளையம் தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகர், மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் கதிரவன் மற்றும் முன்னாள் நகர் உறுப்பினர்கள் கலைமணி அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.