பூலித்தேவன் பிறந்தநாள் மற்றும் உலக கடிதம் தினம் கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் மாணவ மாணவிகளுக்கு சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் பூலித்தேவன் பிறந்தநாள் மற்றும் உலக கடிதம் தினம் விடியல் ஆரம்பம் சார்பாக கொண்டாடப்பட்டது.

Update: 2024-09-01 14:15 GMT

குமாரபாளையத்தில் மாணவ மாணவிகளுக்கு சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் பூலித்தேவன் பிறந்தநாள் மற்றும் உலக கடிதம் தினம் விடியல் ஆரம்பம் சார்பாக கொண்டாடப்பட்டது.

பூலித்தேவன் பிறந்தநாள் மற்றும் உலக கடிதம் தினம்

குமாரபாளையத்தில் மாணவ மாணவிகளுக்கு சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் பூலித்தேவன் பிறந்தநாள் மற்றும் உலக கடிதம் தினம் விடியல் ஆரம்பம் சார்பாக கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் வேதாந்தபுரம் பகுதியில் மாணவ மாணவிகளுக்கு சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் பூலித்தேவன் பிறந்தநாள் மற்றும் உலக கடிதம் தினம் விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. பூலித்தேவன் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவீரர் பூலித்தேவர் வரலாற்றை தன்னார்வலர் ஜமுனா எடுத்துரைத்தார்.

உலக கடிதத் தினத்தையொட்டி தபால் அட்டை மற்றும் பேனா ஆகியன வழங்கி, மாணவ மாணவிகளுக்கு கடிதம் எழுதும் பயிற்சி வழங்கப்பட்டது .இன்றைய கம்ப்யூட்டர் உலகில் கடிதம் எழுதுவது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயமாக மாறிவிட்டது. இனிய விழாவில் மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி வைக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தன்னார்வலர் பிரியங்கா பரிசு வழங்கினார்.

இதில் தீனா, கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News