குமாரபாளையம் நகராட்சி பள்ளி பாதுகாப்பிற்கு சி.சி.டி.வி. கேமரா
குமாரபாளையத்தில் நகராட்சி பள்ளி பாதுகாப்பிற்கு பொதுநல ஆர்வலர் சி.சி.டி.வி. கேமரா வழங்கினார்.
குமாரபாளையம் நகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவியர் மற்றும் பள்ளிகளின் பாதுகாப்பிற்கு சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படும் என நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் கூறியிருந்தார். அதன்படி சின்னப்பநாயக்கன்பாளையம் தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளியில் வைப்பதற்காக பொதுநல ஆர்வலர் விஸ்வநாதன், சேர்மன் விஜய்கண்ணனிடம் சி.சி.டி.வி. கேமரா வழங்கினார்.அப்போது கவுன்சிலர் ராஜ், நிர்வாகிகள் செல்வராஜ், ஐயப்பன், வேலுமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.