மேய்ச்சல் நிலமாக மாறிய காவிரி ஆறு

குமாரபாளையத்தில் காவிரி ஆறு கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.

Update: 2022-02-12 16:00 GMT

குமாரபாளையத்தில் காவிரி ஆறு கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.

குமாரபாளையம் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பாறைகளும், புற்களுமாக காட்சியளிக்கிறது.

இதனால் கால்நடைகள் வளர்ப்போர் தங்கள் மாடுகல், எருமைகள், ஆடுகள் ஆகியவற்றை காவிரி ஆற்றில் மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். ஆற்றின் மையப்பகுதியை தாண்டியும் சென்று மேய்ந்து வருகிறது.

தினமும் காலை 07:00 மணிக்கு கொண்டுவந்து ஆற்றில் விட்டுவிட்டு, மாலை 06:00 மணிக்கு மேல் கால்நடைகள் வளர்ப்போர் அவைகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்து செல்கின்றனர்.

100க்கும் மேற்பட்ட கால்நடைகளை சேலம் சாலையில் ஒன்றாக அழைத்து செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Tags:    

Similar News