மேய்ச்சல் நிலமாக மாறிய காவிரி ஆறு

குமாரபாளையம் காவிரி ஆறு, கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியது.;

Update: 2024-06-06 14:15 GMT

படவிளக்கம் :

குமாரபாளையம் காவிரி ஆறு, கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது.

மேய்ச்சல் நிலமாக மாறிய காவிரி ஆறு

குமாரபாளையம் காவிரி ஆறு, கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியது.

கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கு கர்நாடக அணையில் இருந்து போதுமான தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. சுமார் இரண்டு வருட அளவில் 50 அடிக்கும் கீழாக தான் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இருந்து வருகிறது. இதனால் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் கூட இரண்டு ஆண்டுகளாக விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடாத நிலை நீடித்து வருகிறது.

அவ்வப்போது, நிலத்தடி நீர் மட்டம் உயர, கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் தேவைக்காக சுமார் 10 நாட்கள் எனும் வகையில், ஆறு மாதத்திற்கு ஒருமுறை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி என பெயர் பெற்ற காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு, குளம் போல் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் செடி, கொடிகள், புல், கோரை, ஆகியவை வளர்ந்துள்ளதால், கால்நடை வளர்ப்போர், காவிரி ஆற்றில் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து விட்டு, மேய்த்து வருகின்றனர்.

நகரின் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் காவிரி ஆற்றில் கலந்து வருவதால், அதுவும் பல இடங்களில் குளம் போல் தேங்கி, துர்நாற்றம் வீசும் நிலை நீடித்து வருகிறது. தற்போது பருவ மழை வந்து கொண்டிருப்பதால், மேட்டூருக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து, திறந்து விடும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குமாரபாளையம் காவிரி ஆறு, கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது.

Tags:    

Similar News