பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் ஆகாயத்தாமரை செடி அகற்றம்
பள்ளிபாளையம் காவேரி ஆற்றில் பரவியுள்ள ஆகாயத்தாமரை செடிகளை , சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தினர் அகற்றினர்.;
பள்ளிபாளையம், காவிரி ஆற்றில் பரவியுள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தினர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப்படுகையில், அதிகளவில் ஆகாயத் தாமரை பரவியுள்ளது. இதனால், நீராதாராம் மாசுபடுவதோடு, நீரும் வீணாகிறது. இது குறித்து, இன்ஸ்டாநியூஸ் இணையதளம், செய்திகளை வெளியிட்டு வந்தது.
இந்த நிலையில், சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகத்தினர் காவிரி ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து, நமது இணையதளத்திற்கு அவர்கள் அளித்த பேட்டியில், இந்த ஆகாயத்தாமரை செடிகளால் ஏற்படும் அபாயத்தை அரசுக்கு விளக்கும் வகையில், விழிப்புணர்வு நிகழ்வாக தற்போது ஆகாயத்தாமரை அகற்றும் பணி நடைபெறுவதாகவும், தொடர் முயற்சியாக முழுமையாக ஆகாய தாமரைகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த அமைப்பினரின் சமூகப்பணி முயற்சியை, பள்ளிபாளையம் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.