குமாரபாளையத்தில் விபத்துக்கு காரணமான பிளெக்ஸ் பேனரை அகற்ற கோரிக்கை
குமாரபாளையத்தில் விபத்துக்கு காரணமான பிளெக்ஸ் பேனரை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் அரசியல் கட்சியினரின் பேனர் வைக்கபட்டுள்ளது. சாலையை கடக்க வரும் வாகன ஓட்டுகளுக்கு இந்த பேனர் இடையூறாக உள்ளது. தொலைவில் வரும் வாகனங்கள் தெரியாமல் தவிக்கும் நிலைக்கு ஆளாக வேண்டியுள்ளது. பலர் இதனை கவனிக்காமல் செல்வதால் வேகமாக வரும் வாகனங்களில் சிக்கி விபத்துக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. விபத்தை ஏற்படுத்தும் இந்த பேனரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.