இருசக்கர வாகனம் மீது கார் மாேதி விபத்து: தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்

குமாரபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் படுகாயம். கார் ஓட்டுனர் கைது.;

Update: 2022-06-01 14:00 GMT

பைல் படம்.

குமாரபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் படுகாயம். கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர் கீர்த்திராஜா, 27. தனியார் நிறுவன பணியாளர். இவர் நேற்றுமுன்தினம் பகல் 12:45 மணியளவில் குப்பாண்டபாளையம் பஸ் நிறுத்தம் அருகே ஹோண்டா டிரம் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, அதே இடத்தில் சாலையின் குறுக்கே வந்த சிப்ட் கார் இவர் மீது மோதியதில் கீர்த்தி ராஜா பலத்த காயமடைந்து குமாரபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுனர் வையப்பமலையை சேர்ந்த காளிதாஸ் 46, என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News