குமாரபாளையம் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அறிமுக கூட்டம்
குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.;
குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாய அணி செயலர் மயில்சாமி பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, அவர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மயில்சாமி பேசும்போது, முதற்கட்டமாக 15 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். அடுத்து வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட பின் மீதமுள்ளவர்கள் அடுத்து வரும் நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தலைவர் வேண்டுகோள்படி அனைத்து வேட்பாளர்களும் வெற்றிபெற பாடுபட வேண்டும் என பேசினார்.
இன்று காலை 11:30 மணியளவில் மாநில செயலர் மயில்சாமி, சமீபத்தில் இறந்த நகர செயலர் சரவணன் வீட்டிற்கு சென்று அவரது படத்திற்கு மலரஞ்சலி செலுத்த உள்ளார். அதன் பின் வேட்பாளர்களுடன் நகராட்சி அலுவலகம் சென்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த கூட்டத்தில் மகளிர் அணி நிர்வாகிகள் சித்ரா, உஷா உள்பட பலர் பங்கேற்றனர்.