வேளாண் சட்டங்கள் ரத்து: இனிப்பு வழங்கி கொண்டாடிய மக்கள் நீதி மய்ய மகளிர் அணி

மக்கள் நீதி மய்யம் மகளிர் அணியினர் சார்பில் பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்தமைக்கு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.;

Update: 2021-11-20 15:45 GMT

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிர் அணியினர் சார்பில் பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்தமைக்கு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். (இடம் : பள்ளிபாளையம் பிரிவு சாலை)

வேளாண் சட்டங்களை ரத்தையடுத்து, குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் மகளிர் அணியினர் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு நகர செயலர் சித்ரா தலைமையில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்றது.

இதில் விவசாய போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு பாராட்டும், இந்த போராட்டத்தில் உயிர்நீத்த நபர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. வேளாண் சட்ட போராட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திடும் வகையில் துண்டு பிரசுரங்களை மகளிரணி நிர்வாகிகள் ரேவதி, உஷா, சுஜாதா வழங்கினார்கள். மாவட்ட பொருளாளர் நந்தகுமார், நகர செயலர் சரவணன் தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து காமராஜ் கூறுகையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடந்த போதுமக்கள் நீதி மய்யம் சார்பில் மாநில விவசாய அணி செயலர் மயில்சாமி, மாநில மகளிர் அணி செயலர் மூகாம்பிகா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் நிறுவன தலைவர் கமல்ஹாசன் உத்திரவின் பேரில் டெல்லி சென்று போராட்டத்தில் பங்கேற்றனர்.

அதே போல் குமாரபாளையம் நகரில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற ஆதரவு போராட்டதில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நகர மகளிரணி செயலர் சித்ரா, புஷ்பா, உஷா, பழனியம்மாள், ஜெயந்தி, சுஜாதா ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் நாங்களும் பங்கேற்றது மிகவும் பெருமைக்குரியது. குமாரபாளையம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.

தேன்மொழி, திருக்குறள் பங்கஜம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News