குமாரபாளையத்தில் விரதம் இருக்கும் பக்தர்களால் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

குமாரபாளையத்தில் பெரும்பாலான பக்தர்கள் விநாயகர் சதுர்த்தி திருவிழா விரதமிருந்து வருவதால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.;

Update: 2023-09-17 12:07 GMT

குமாரபாளையம் மீன் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

குமாரபாளையத்தில் பெரும்பாலான பக்தர்கள் விநாயகர் சதுர்த்தி திருவிழா விரதமிருந்து வருவதால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பக்தர்கள் விரதமிருந்து வருகிறார்கள். இதனால் குமாரபாளையம் பகுதியில் ஆட்டிறைச்சி, கோழி, மீன் கடைகளில் வாங்க ஆளில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இது குறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழா தமிழகத்தில் சில ஆண்டுகளாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறைந்த பட்சம் விநாயகர் கொலு மூன்று நாட்கள் வைப்பார்கள். அதனால் பக்தர்கள் சில நாட்களுக்கு முன்பே விரதமிருந்து வருவதால், இறைச்சி கடைகளில் கூட்டம் இல்லாத நிலை ஏற்பட்டது. மேலும் ஆவணி மாதம் கடைசி முகூர்த்தம் என்பதாலும், பெரும்பாலான பொதுமக்கள் திருமண விஷேசங்களுக்கு சென்று விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

குமாரபாளையம் நகரில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகள் ஒவ்வொரு வீதியிலும் கொலு வைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, மூன்று நாட்கள் கழித்து காவிரி ஆற்றில் கரைக்கப்படும். இந்த ஆண்டில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து சிலை அமைப்பு நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் சிலை அமைப்பு குழுவினருக்கு விநாயகர் சிலை கரைப்பு தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த ஆலோசனைகளின் படி மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்கப்பட வேண்டும் எனவும் ஆய்வாளர் தவமணி கறார் ஆக கூறி உள்ளார்.

Tags:    

Similar News