காய்கறி சந்தையான பள்ளிபாளையம் பேருந்து நிலையம்

பேருந்து நிறுத்த பகுதியில் அதிகாலை தொடங்கி,காலை பதினோரு மணி வரை காய்கறி வியாபாரம் நடைபெற்று வருகிறது.

Update: 2021-06-25 07:45 GMT

பேருந்து நிறுத்த பகுதியில்,காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் சற்றே குறைந்திருந்தாலும்,நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்னும் முழுமையான தளர்வுகள் அறிவிக்கபடவில்லை.நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில்,புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை நாட்களில் கூடும் வாரச்சந்தைகள்,கொரோனா அச்சம் காரணமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், காய்கறி வியாபாரிகள் வாரச் சந்தை அமைக்க முடியாததால் , தற்காலிக இடங்களிலும், நடமாடும் காய்கறி வண்டி மூலம் பொதுமக்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளிபாளையம் பகுதியில் பேருந்துகள் இயக்கபடாததால், அந்த இடத்தில் தினந்தோறும் காய்கறி வியாபாரிகள்,தற்காலிகமாக காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து  "இன்ஸ்டாநியூஸ்" செய்திக்கு வியாபாரிகள் கூறியதாவது, தொடர்ச்சியாக வாரச் சந்தைகள் இயங்காததால், வேறுவழியின்றி தற்காலிகமாக பேருந்து நிறுத்த நிழற்குடை பகுதியில் காய்கறி கடைகளை அமைத்துள்ளதாகவும், பொதுமக்களின் ஆதரவும் உள்ளதால் வியாபாரம் ஓரளவுக்கு நடப்பதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News