விபத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த கோழிக்கடை வாடிக்கையாளர்கள்

குமாரபாளையத்தில் விபத்தில் இறந்த தொழிலாளியின் உடலை, கோழிக்கடை வாடிக்கையாளர்கள் அடக்கம் செய்தனர்.

Update: 2021-10-04 05:00 GMT

 குமாரபாளையத்தில், விபத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த கோழிக்கடை வாடிக்கையாளர்கள்.

குமாரபாளையம் காலனி மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே,  கோழி இறைச்சி கடையில் பணியாற்றி வந்தவர், ஓசூரை சேர்ந்த ஸ்ரீகாந்த், 25. இவர் கடந்த 6 மாதம் முன்புதான்,  இந்த கடையில் பணியில் சேர்ந்துள்ளார்.

கடந்த செப். 27ல் வட்டமலை தனியார் கல்லூரி எதிரில், சேலம் கோவை புறவழிச் சாலையை நடந்து கடந்துள்ளார். அப்போது சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த டூவீலர் மோதியதில், படுகாயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர்.

இவரது உடல், குமாரபாளையம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது. இவரது உறவினர்கள் யாரும் வராததால், கோழிக்கடை வாடிக்கையளர்களான மாணிக்கம், சுரேஷ், குப்புராஜ், தேவராஜ், யுவராஜ், தேவா, கோழிக்கடையினர் பிரபு, பூமணி உள்ளிட்ட பலர், ஸ்ரீகாந்தின் உடலை குமாரபாளையம் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். இவர்களது செயலை, பலரும் பாராட்டினர்.

Tags:    

Similar News