குமாரபாளையம் அங்கன்வாடி மையத்திற்கு பீரோ, டி.வி. வழங்கல்

குமாரபாளையம் அங்கன்வாடி மையத்திற்கு தி.மு.க. கவுன்சிலர் பீரோ, டி.வி-யை வழங்கினார்.;

Update: 2022-04-14 02:47 GMT

குமாரபாளையம் சுந்தரம்காலனி அங்கன்வாடி மையத்திற்கு தி.மு.க.கவுன்சிலர் கதிரவன் சேகர் சார்பில், நகர தி.மு.க பொறுப்பாளர் செல்வம் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எல்.இ.டி டிவி, பீரோ நான்கு நாற்காலிகள் வழங்கினார்.  

குமாரபாளையம் சுந்தரம்காலனி காளியண்ணன் நகர் அங்கன்வாடி மையத்திற்கு 24 வது வார்டு தி.மு.க.கவுன்சிலர் கதிரவன் சேகர் சார்பில், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எல்.இ.டி. டிவி, பீரோ நான்கு நாற்காலி வழங்கும் விழா நடைபெற்றது.

நகர தி.மு.க பொறுப்பாளர் செல்வம் தலைமை வகித்து பொருட்களை வழங்கி குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிர்வாகிகள் ஞானசேகரன், ரவி, பிரேம்குமார், ராதிகா, ராமசாமி, சுப்ரமணி, சவுந்திரராஜன், குமார், கவுதம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News