குமாரபாளையத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து சேதம்: உயிர் பிழைத்த தொழிலாளர்கள்
குமாரபாளையத்தில் மழையால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் உயிர் பிழைத்தனர்.;
குமாரபாளையத்தில் மழையால் இடிந்து விழுந்த விசைத்தறிக்கூட சுவர்.
குமாரபாளையத்தில் மழையால் கட்டிடம் இடிந்து விழுகையில் ஆட்கள் இல்லாததால் தொழிலாளர்கள் உயிர் பிழைத்தனர்.
குமாரபாளையம் அருகே கோட்டைமேடு பகுதியில் வசிப்பவர் யுவராஜ், 45. இவர் 10 விசைத்தறிகள் வைத்துக்கொண்டு ஜவுளி உற்பத்தி தொழில் செய்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு 10:00 மணியளவில் வேலை முடிந்து தொழிலாளர்கள் வீட்டுக்கு சென்றனர்.
தொடர்மழை பெய்து கொண்டிருந்ததால், இவரது விசைத்தறி கூடம் சுவர் மண்ணால் ஆனது என்பதால், மழை நீரில் ஊறிய நிலையில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் விசைத்தறிகள், மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகள் சேதமடைந்தன. ஆட்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் போனது.