அண்ணன் தம்பி அடிதடி தகராறு
குமாரபாளையத்தில் அண்ணன் தம்பி அடிதடி தகராறு ஏற்பட்டது.;
அண்ணன் தம்பி
அடிதடி தகராறு
குமாரபாளையத்தில் அண்ணன் தம்பி அடிதடி தகராறு ஏற்பட்டது.
குமாரபாளையம் நாராயண நகரை சேர்ந்தவர் குன்னசாமி, 53. இவர் சொந்த ஊரை விட்டு, தெலுங்கானாவில் விவசாயம் செய்து வருகிறார். இவர் உள்ளூர் திருவிழா சமயத்தில் குமாரபாளையம் வருகை தந்து, மீண்டும் தெலுங்கானா செல்வது வழக்கம். இவர் குமாரபாளையம் வந்த போது, இவரது தம்பி வீராசாமி, 48, மனைவி பார்வதி, 40, ஆகியோர், அண்ணன் வீட்டில் இருந்து, அவரை கேட்காமல் மின்சாரம் பயன்படுத்தியதால், அண்ணன் குன்னாசாமி, அவரது மனைவி ஆகியோர் கேட்டதற்கு, தம்பி வீராசாமி, அவரது மனைவி பார்வதி ஆகியோர், இருவரையும் கைகளால் தாக்கியுள்ளனர். இது குறித்து குன்னாசாமி குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, போலீசார் இது குறித்து வீராசாமி, பார்வதி வசம் விசாரணை செய்து வருகின்றனர்.