குமாரபாளையம் இன்னர்வீல் சங்கம் சார்பில் தாய்ப்பால் வார விழா
ரோட்டரி மற்றும் இன்னர்வீல் சங்கம் சார்பில் தாய்ப்பால் வார விழா குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.;
குமாரபாளையம் ரோட்டரி மற்றும் இன்னர்வீல் சங்கம் சார்பில் தாய்ப்பால் வார விழா குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவி கவிதா தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் பி.எம்.ஒ.வும், கல்லங்காட்டுவலசு அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செந்தாமரை பங்கேற்று, குழந்தைகளுக்கு தாய்பால் அவசியம் குறித்தும், தாய்மார்கள் கடைபிடிக்க வேண்டிய மருத்துவ ஆலோசனைகளையும் கூறினார்.
பின்னர், குழந்தைகளை பாதுகாக்க தாய்மார்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை 25 நபர்களுக்கு வழங்கினார். 500 க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து வரும் சரவணன், 27, கோபால், 24, இருவரும் கவுரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில், ரோட்டரி, இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.