குமாரபாளையத்தில் தாய்ப்பால் விழிப்புணர்வு கருத்தரங்கம், இலவச மருத்துவ முகாம்

குமாரபாளையத்தில் தாய்ப்பால் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.;

Update: 2022-08-09 14:15 GMT

குமாரபாளையத்தில் நடைபெற்ற தாய்ப்பால் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் இலவச மருத்துவ முகாமில் சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்றார்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் தாய்ப்பால் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் இலவச மருத்துவ முகாம் கவுன்சிலர் ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் தாய்மார்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், இலவச மருந்துகள் வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சேர்மன் விஜய்கண்ணன் வாழ்த்தி பேசி தாய்மார்களுக்கு பரிசுகள் மற்றும் தாய்ப்பால் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News