குமாரபாளையத்தில் நூலகம், அறிவுசார் மையம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை
குமாரபாளையத்தில் நூலகம், அறிவுசார் மையம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.;
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் வாரச்சந்தை வளாகத்தில் நூலகம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022 2023ன்படி குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் வாரச்சந்தை வளாகத்தில் ஒரு கோடியே 92 லட்சம் மதிப்பில் நூலகம், அறிவுசார் மையம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதற்காக தோண்டப்பட்ட குழியில் நவதானியங்கள், பால், மலர்கள் போடப்பட்டு, அரசமரக்கிளை நடப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கமிஷனர் விஜயகுமார், பொறியாளர் ராஜேந்திரன், தி.மு.க. நகர செயலர் செல்வம் உள்ளிட்ட கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.