அண்ணா நூலகத்திற்கு புத்தகங்கள், நிதியுதவி வழங்கிய திமுகவினர்

குமாரபாளையம் அறிஞர் அண்ணா நூலகத்திற்கு புத்தகங்கள் மற்றும் நிதியுதவியினை திமுகவினர் வழங்கினர்.;

Update: 2021-08-05 15:45 GMT

குமாரபாளையம் அறிஞர் அண்ணா நூலகத்திற்கு 300 புத்தகங்களை கோட்டைமேடு பழனிவேல் நகர பொறுப்பாளர் செல்வத்திடம் வழங்கினார். 

குமாரபாளையம் திமுக சார்பில் தொடங்கப்பட்ட அறிஞர் அண்ணா நூலகம் நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்தது. நகர பொறுப்பாளர் செல்வம் அதனை மீண்டும் திறந்து புதுப்பித்தார். இதில் புத்தகங்கள் மிக குறைவாக இருந்தது. பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் திமுக பிரமுகர் கோட்டைமேடு பழனிவேல் 300 புத்தகங்கள் நன்கொடையாக வழங்கினார். இதை தொடர்ந்து திமுகவினர்களாக பந்தல் பாலு 25 ஆயிரம், ராதாகிருஷ்ணன் 5 ஆயிரம், ராசு 10 ஆயிரம், ராமதுரை 5 ஆயிரம் நன்கொடையாக வழங்கினர். கலைஞர் இணையவழி படிப்பகமாக தரம் உயர்த்திடவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நிர்வாகிகள் அன்பரசு, ரவி, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் இதற்கான பணிகளை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News