குமாரபாளையம்; அரசு பள்ளியில் புத்தக தின விழா

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில், உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது;

Update: 2024-04-23 14:15 GMT

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக புத்தக தினம், அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் உலக புத்தக தினம், கொண்டாடப்பட்டது

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக புத்தக தினம், அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் கிளை நூலகர் மாரியம்மாள் பங்கேற்று, புத்தகங்களின் சிறப்புகளை விரிவாக எடுத்துரைத்தார்கள். கிளை நூலக வாசக வட்ட தலைவர் பிரகாஷ் பேசிய போது, வாசிப்பால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும், மேலும் சென்றாண்டு போல் இந்த ஆண்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வாசிப்பு இயக்கம் நடைபெறும், விருப்பம் உள்ள மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம், அனைத்து மாணவர்களுக்கும் இதில் கதை புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இதில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு தலைமையாசிரியை கவுசல்யாமணி புத்தகங்கள் பரிசாக வழங்கினார்.

விழாவில் ஆசிரியர் சாந்தி, கலைவாணி, மற்றும் தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.

பாராட்டு விழா

சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு விழாவில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் குமாரபாளையம் ஓலப்பாளையம் பகுதியைச் சார்ந்த இளம் வீரர் தருண் விகாஸ் பங்கேற்று, தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார். குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பாக அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் பாராட்டு விழா நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளராக, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, சேலம் மாவட்ட டி.எஸ்.பி. சண்முகம் பங்கேற்று, சாதனை படைத்த தருண் விகாஸ்க்கு பதக்கம் அணிவித்து, புத்தகங்கள் வழங்கி பாராட்டினார். பஞ்சாலை சண்முகம், ஆறுமுகம், சந்திரசேகர், உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News