முதல்வர் ஸ்டாலினை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம், 50க்கும் மேற்பட்டோர் கைது!

குமாரபாளையத்தில் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்ததால் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-11-26 10:45 GMT

படவிளக்கம் : குமாரபாளையத்தில் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

முதல்வர் ஸ்டாலினை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம், 50க்கும் மேற்பட்டோர் கைது

குமாரபாளையத்தில் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்ததால் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசும் பொழுது, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை, அவர் விடும் அறிக்கைக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில், குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு பகுதியில், நாமக்கல் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் சுதாகர் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காவல்துறை அனுமதி இன்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறியதையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டத்தின் போது, கட்சியின் தொண்டர் ஒருவர் குடிபோதையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை பிரித்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்தின் கோஷத்தை விட அதிகமாக கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது மேலும் போலீசார் அவரிடம் இருந்த கொடியை பிடுங்கிக் கொண்டு அவரை தனித்து விட்டனர் இருப்பினும் கைதானவர்களுடன் தானும் செல்வேன் என போலீசாரின் தடுப்பை மீறி உள்ளே நுழைய முயன்றார். குடி போதையில் இருப்பதால் கைது செய்யாமல் அங்கே விட்டுவிட்டு சென்றனர்.

Tags:    

Similar News