அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ரத்ததான முகாம்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ரத்ததான முகாம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நடந்தது;

Update: 2025-03-23 16:23 GMT

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ரத்ததான முகாம்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ரத்ததான முகாம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நடந்தது

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நாமக்கல் மாவட்ட குழு சார்பில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 94ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ரத்ததான முகாம், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நடந்தது. நிர்வாகிகள் கார்த்திகேயன், மோகன் தலைமை வகித்தனர். இன்ஸ்பெக்டர் தவமணி முகாமினை துவக்கி வைத்தார். இதில் 44 பேர் ரத்ததானம் வழங்கினர். இதில் ரத்தவகை கண்டறிதல், ரத்த கொதிப்பு, ஆகியவை இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. ரத்ததானம் வழங்கியவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

படவிளக்கம் :

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ரத்ததான முகாம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நடந்தது

Similar News