பா.ஜ.க. சார்பில் ஓமலூர் மாநாடு ஆலோசனை கூட்டம்
குமாரபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் மற்றும் ஓமலூர் மாநாடு ஆலோசனை கூட்டம் நடந்தது.;
பா.ஜ.க. சார்பில் ஓமலூர் மாநாடு
ஆலோசனை கூட்டம்
குமாரபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் மற்றும் ஓமலூர் மாநாடு ஆலோசனை கூட்டம் நடந்தது.
குமாரபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் பூத் கமிட்டி மற்றும் ஓமலூர் மாநாடு ஆலோசனை மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு பொது செயலர் கேசவவிநாயகம் பங்கேற்று பேசினார். இவர் பேசியதாவது:
பூத் கமிட்டியின் பணிதான் வெற்றியை தேடித்தரும். மிகவும் கண்காணிப்புடன் பணியாற்றி கட்சிக்கு வெற்றியை தேடித்தர வேண்டும். தேர்தலில் வீடு வீடாக சென்று, பா.ஜ.க. ஆட்சி சாதனை குறித்து எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினர் வெளியூர் சென்று இருந்தால், அவரை வரவழைத்து வாக்களிக்க வைக்க வேண்டும். சமக்கல்வி திட்டம் குறித்து கையெழுத்து இயக்கம் நடத்தி, பொதுமக்கள் ஆதரவு பெற வேண்டும். ஓமலூரில் நடைபெறவுள்ள மாநாட்டில் கட்சியினர், பொதுமக்களை பெருமளவில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட பொதுச் செயலர் வழக்கறிஞர் சரவணராஜன், மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வழக்கறிஞர் தங்கவேல், மண்டல தலைவர் வாணி, பள்ளிபாளையம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலர்கள் ராகவேந்திரன், சம்பத், பள்ளிபாளையம் நகர தலைவர் லோகேஸ்வரன், மாவட்ட மகளிரணி தலைவி புவனேஸ்வரி, நகர நிர்வாகி இந்திரா உள்பட கட்சியினர் பெருமளவில் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
குமாரபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.