பா.ஜ.க சார்பில் கையெழுத்து இயக்கம்

குமாரபாளையம் நகர பா.ஜ.க சார்பில் சம கல்வி எங்கள் உரிமை, மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடந்தது.;

Update: 2025-03-09 15:36 GMT

பா.ஜ.க சார்பில்

கையெழுத்து இயக்கம்


குமாரபாளையம் நகர பா.ஜ.க சார்பில் சம கல்வி எங்கள் உரிமை, மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடந்தது.

குமாரபாளையம் நகர பா.ஜ.க சார்பில் சம கல்வி எங்கள் உரிமை, மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நகர தலைவி வாணி தலைமையில் நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் . ராஜேஷ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் சரவண ராஜன், மாவட்ட மகளிர் அணி தலைவர் புவனேஸ்வரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அப்புசாமி, ஐயப்பன் மற்றும் குமாரபாளையம் நகர பா.ஜ.க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் தமிழ் ஆங்கிலம் மற்றும் இன்னொரு மொழியை கற்க வழிவகை செய்ய சம கல்வி எங்கள் உரிமை கையெழுத்தியக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் முதியோர்களும் பொதுமக்களும் தங்களுடைய ஆதரவை கையெழுத்துயிட்டு தெரிவித்துள்ளனர்.

படவிளக்கம் :

குமாரபாளையம் நகர பா.ஜ.க சார்பில் சம கல்வி எங்கள் உரிமை, மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடந்தது.

Similar News