பிரதமர் பாதுகாப்பு: குமாரபாளையம் பா.ஜ.க.வினர் கையெழுத்து இயக்கம்

பிரதமர் பாதுகாப்பு குளறுபடியை கண்டித்து, குமாரபாளையம் பா.ஜ.க.வினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.;

Update: 2022-01-12 00:15 GMT

குமாரபாளையம் பா.ஜ.க.வினர் சார்பில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்றபோது, அவரது  பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யவில்லை. இதற்காக  பஞ்சாப் காங்கிரஸ் முதல்வரை கண்டித்தும், பஞ்சாப் டி.ஜி.பி. முதலான போலீசாரை கண்டித்தும், குமாரபாளையம் பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

குமாரபாளையத்தில், பள்ளிபாளையம் பிரிவு சாலையில் பொதுமக்களிடம் நகர தலைவர் ராஜு தலைமையில்  கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் மாவட்ட தலைவர் செங்கோடன்,  கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

மாவட்ட பாஜக நெசவாளர் பிரிவு செயலர் ஐயப்பன், மாவட்ட விவசாய அணி தலைவர் வெப்படை பாலு, நகர பொது செயலர் துபாய் கணேஷ்குமார், மாவட்ட கல்வியியல் பிரிவு நிர்வாகி கண்ணன் குமார், நகர செயலர்கள் சண்முகம், குமார், நகர பொருளர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று கையொப்பமிட்டனர்.

Tags:    

Similar News