பா. ஜ. க. சார்பில் நீர் மோர் பந்தல்
குமாரபாளையத்தில் பா. ஜ. க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.;
பா. ஜ. க. சார்பில்
நீர் மோர் பந்தல்
குமாரபாளையத்தில் பா. ஜ. க. சார்பில் நீர் மோர் பந்தல்
திறப்பு விழா நடந்தது.
குமாரபாளையத்தில் பா. ஜ. க. சார்பில் நீர் மோர் பந்தல்
திறப்பு விழா நடந்தது. மாவட்ட பொதுச் செயலர் சரவணராஜன், நகர தலைவர் வாணி தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் பங்கேற்று, நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இவர் பேசியதாவது:
வெயில் காலம் நம்மை சோர்வடைய செய்யும். உடல் பலகீனமாகும். இதை தவிர்க்க மோர், இளநீர், தர்பூசணி, கம்பு கூழ் போன்றவைகளை உண்டு, நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். பெரும்பாலோர் வேலை எல்லாம் வெயிலில் சுற்றி செய்வதுதான். வெயில் என்பதற்காக வெளியில் வராமல், வேலை செய்யாமல் இருக்க முடியுமா? பொதுமக்கள் நன்மைக்காக இது போன்ற நீர் மோர் பந்தல் அமைத்து, சேவை செய்வது, மிகவும் புண்ணியம் ஆகும். வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளரி, கரும்பு சாறு, நுங்கு, நீர் மோர் ஆகியன வழங்கப்பட்டன.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சேகர், நகர பொது செயலர் சுரேஷ்குமார், உள்பட நகர, மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் பலரும் பங்கேற்றனர். நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
குமாரபாளையத்தில் பா.ஜ.க. சார்பில்
நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.