குமாரபாளையத்தில் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கிய பா.ஜ.க.வினர்

பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளையொட்டி குமாரபாளையம் கர்ப்பிணிகளுக்கு பா.ஜ.க.வினர் சீர்வரிசை வழங்கினர்.;

Update: 2021-09-19 02:25 GMT

குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு, சீர் வரிசை வழங்குதல் நிகழ்வு சேவாபாரதி அலுவலகத்தில் நடைபெற்றது.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளையொட்டி குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு, சீமந்தம் செய்தல், சீர் வரிசை வழங்குதல் நிகழ்வு சேவாபாரதி அலுவலகத்தில் நடைபெற்றது. வழக்கறிஞர் பிரிவு மூத்த நிர்வாகி வக்கீல் தங்கவேல் தலைமை வகித்தார்.

சேவா பாரதி நிர்வாகிகள் கீதா, தனலட்சுமி உள்ளிட்ட மகளிர் அணியினர் வளைகாப்பு, சீமந்தம் செய்து 5 வகை சாதங்களுடன் உணவு வழங்கினர்.

புடவை, இனிப்புகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி, சீப்பு,உள்ளிட்ட பழ பொருட்கள் அடங்கிய சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் 25க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் பங்கேற்றனர்.

பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பாஜக நிர்வாகிகள் ஐயப்பன், ராஜா, மணிவண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News