பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் 9 பேர் கைது
குமாரபாளையத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்ததில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.;
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
9 பேர் கைது
குமாரபாளையத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்ததில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
பா.ஜ.க. சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். அண்ணாமலை கைதை கண்டித்து, அவரை விடுதலை செய்யக்கோரி, நகர பா.ஜ.க. சார்பில் நகர தலைவர் வாணி தலைமையில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் சேகர், நகர பொது செயலர்கள் கலைச்செல்வன், சுரேஷ்குமார், துணை தலைவர் சண்முகராஜன், நிர்வாகிகள் நிர்மலா, பழனிச்சாமி, செந்தில்குமார், உலகநாதன் பங்கேற்றனர். இதில் அண்ணாமலையை விடுதலை செய்யக்கோரியும், தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் குமாரபாளையம் போலீசார் 9 நபர்களை கைது செய்து, நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
படவிளக்கம் :
குமாரபாளையத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்ததில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.