பன்னாட்டு லயன்ஸ் சங்கத் தலைவர் பிறந்த நாள்: பொதுமக்களுக்கு அன்னதானம்
பன்னாட்டு லயன்ஸ் சங்கத் தலைவர் பிறந்த நாளையொட்டி குமாரபாளையத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.;
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் பன்னாட்டு லயன்ஸ் சங்கத் தலைவர் பிறந்த நாளையொட்டி, தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
குமாரபாளயைம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில், பன்னாட்டு லயன்ஸ் சங்க தலைவர் டக்லஸ் அலெக்சாண்டர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் மற்றும் அன்னதான திட்ட மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். பட்டய தலைவர் ஜெகதீஸ் பங்கேற்று அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், முக கவசங்கள், கிருமிநாசினி மருந்து வழங்கப்பட்டன.
இந்த விழாவில் செயலர் செல்வராஜ், பொருளர் தர்மலிங்கம் மாதேஸ்வரன், மதியழகன், குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.