குமாரபாளையத்தில் வ.உ.சி., ராதாகிருஷ்ணன், கல்கி கிருஷ்ணமூர்த்தி பிறந்த நாள் விழா
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் வ.உ.சி., ராதாகிருஷ்ணன், கல்கி கிருஷ்ணமூர்த்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் நடைபெற்ற கல்கி கிருஷ்ணமூர்த்தி பிறந்தநாள் விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர்கள், அறிவியல் கண்டுபிடிப்பு சாதனையாளர்கள், பிரபல அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரது பிறந்த நாள் விழாக்கள் மாணவ, மாணவியர்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வ.உ.சி., முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், கல்கி கிருஷ்ணமூர்த்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவர்களது திருவுருவப்படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு புத்தங்கங்கள், முகக்கவசங்கள், கிருமிநாசினி மருந்துகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் செல்வம், கார்த்தி, அங்கப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.